பிளஸ்-2 சிறப்புத் துணைத் தேர்வர்கள் செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை விடைத் தாள் நகல்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
உரிய வங்கி சலான் (டிஜிஇ) பாகத்தை செப்டம்பர் 2-ம் தேதிக்குள் தேர்வுத் துறையில் சமர்ப்பித்த தேர்வர்கள் மட்டுமே விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.அவ்வாறு பதிவிறக்கம் செய்ய பதிவு எண், பிறந்த தேதி, 2013 ஜூன் மாதம் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள டிஎம்ஆர் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்த மாணவர்கள், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க www.tndge.inஎன்ற இணைய தளத்திலிருந்து செப்டம்பர் 8-ம் தேதி முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கட்டணத்துடன் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செப்டம்பர் 11,12 தேதிகளில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணத்தை பணமாக செலுத்த வேண்டும் என தேர்வுத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமதிப்பீட்டுக் கட்டணம்:
மொழிப்பாடம் (தாள் 1 மற்றும் 2) ரூ. 1010
ஆங்கிலம் தாள் (தாள் 1 மற்றும் 2) ரூ. 1010
இதர பாடங்கள் (ஒவ்வொன்றுக்கும்) ரூ. 505
மறுகூட்டல் கட்டணம்:
மொழிப்பாடம், ஆங்கில மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) ரூ. 305
இதர பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) ரூ. 205
0 Response to "பிளஸ்-2 துணைத் தேர்வர்கள்: செப். 8 முதல் விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்"
Post a Comment